கார் ஏற்றி விவசாயிகள் கொலை பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன்மீது விசாரணை உச்சநீதிமன்றம் உத்தரவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.21 உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க மேனாள் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில், மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளா்யாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த கார் விவசாயிகள் மீது மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து விவசாயிகள் நடத்திய தாக்குதலில், கார் ஓட்டுநா் மற்றும் 2 பாஜக தொண்டா்கள் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் ஊடகவியலாளா் ஒருவரும் உயிரிழந்தார்.

சாட்சிகள் கலைப்பு

விவசாயிகள் மீது மோதிய காரில் அப்போதைய ஒன்றிய இணையமைச்சா் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆசிஷ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் பிணை அளித்தது. இந்நிலையில், வழக்கின் சாட்சிகளை ஆசிஷ் மிஸ்ரா கலைக்க முயற்சிப்பதாக உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 20.1.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்க ஆசிஷ் மிஸ்ரா முயற்சி செய்ததற்கான ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது. பிணை நிபந்தனைகளை மீறி, பொதுக் கூட்டத்தில் ஆசிஷ் மிஸ்ரா கலந்துகொண்டார். எனவே அவரின் பிணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரினார்.

விசாரணை அறிக்கை

ஆசிஷ் மிஸ்ரா தரப்பில் மூத்த வழக்குரைஞா் சித்தார்த் தவே ஆஜராகி, ‘தேவையில்லாமல் ஆசிஷ் மிஸ்ரா குறிவைக்கப்படுகிறார். அவா் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டம் நடைபெற்ற நாளில், அவா் டில்லியில் உள்ள மக்களவைச் செயலகத்தில் இருந்தார்’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இருதரப்பு வழக்குரைஞா்களின் வாதங்கள் தொடா்பான ஆதாரங்கள் லக்கீம்பூா் கெரி காவல் கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். அவா் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தில் 4 வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *