வாசிங்டன், ஜன.21 ஜனவரி 18 ஆம் தேதி அன்று, ஆயிரக்கணக்கான பெண்கள் வாசிங்டனில் பேரணி நடத்தினர். ஜனவரி 20 அன்று அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இந்தப் பேரணியை நடத்தினர்.
‘தி பீப்பிள்ஸ் மார்ச்’ என்று அழைக்கப்படும் இந்த பேரணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக இது ‘வுமென்ஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்டது.
பல்வேறு பெண்கள் அமைப்பி னர் ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பேரணியை நடத்தினர்.
‘டிரம்பிசத்தை’ எதிர்க்கும் நோக்கில்…
‘டிரம்பிசத்தை’ எதிர்க்கும் நோக்கில் இந்தப் பேரணி நடத்தப்படுவதாக அவர்களின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம், சியாட்டிலின் பல இடங்களிலும் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.
டிரம்ப் திங்களன்று அதிபராக பொறுப்பேற்றார். வாசிங்டனில் தொடர்ச்சியாக சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்த சயத்தில் பெண்களின் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களைக் காட்டிலும் சனிக்கிழமை (18.1.2025) நடந்த பேரணியில் குறைவான நபர்களே பங்கேற்றனர்.
பேரணியை நடத்த திட்ட மிட்டவர்கள், பேரணியில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 5 ஆயிரம் பேர் மட்டுமே பேரணியில் பங்கேற்க வந்தனர்.
லிங்கனின் நினைவகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு மூன்று பூங்காக்களில் அவர்கள் ஒன்று கூடினார்கள்.
பல்வேறு பின்புலத்தில் இருந்து வந்த அவர்கள், காலநிலை மாற்றம், புலம் பெயர்வு மற்றும் பெண்களின் உரிமைகள் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்று ‘பீப்பிள்ஸ் மார்ச்’-இன் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.