வணிகர்களை அச்சுறுத்தும் ஒன்றிய அரசு

4 Min Read

மதுரை, ஜூலை 18  ஜி.எஸ்.டி நெட்வொர்க் அமைப்பை (GSTN) அமலாக்கத்துறை நிர் வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கி யிருப்பதற்கு வணிகர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். வணிகர்கள்  நலனுக்கு எதிரான இதை உடனடியாக  திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர். 

இதுகுறித்து வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு வணிகர்நல வாரிய உறுப்பினருமான எஸ்.இரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப் பரி மாற்றத் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஜி.எஸ்.டி  நெட்வொர்கைச் (GSTN) சேர்த்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித் திருப்பதற்கு தமிழ்நாட்டிலுள்ள தொழில் வணிகத்துறை சார்பாக வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துக்கொள்கிறது. இது வணிகர்களிடையே, குறிப்பாக  நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜி.எஸ்.டி  வரிச் சட்டம் அமலான 2017 ஜூலை 1 முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான சுற்றறிக்கைகள், திருத்  தங்கள், கேள்வி பதில் விளக்கங்கள்  அளிக்கப்பட்டுள்ளன. பல சட்டத் திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை  வரிச்சட்ட அமலாக்கத்துறை அதிகாரி களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு வணிகம் செய்ய நம்நாட்டில் உள்ள பெரும் பாலும் உயர்கல்வி பயிலாத வணி கர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.  வரி ஏய்ப்பு செய்ய வேண் டும் என்ற  நோக்கம் இல்லாமல் தொழில்நுட்பத் தவறு (Technical Mistake) என்று  சொல்லக்கூடிய நுட்பமான தவறுகளுக்கும்கூட கடுமையான அபராதங்கள் விதிக்க சரக்கு வாகனங்களைச்  சோதனையிடும் ரோவிங்ஸ்குவாட் அதிகாரி களுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யாத வணிகர்களும் மிரட்டப்படுவதாகப் புகார்கள்  வருகின்றன. லஞ்சத்தின் ஊற்றுக் கண்ணாக இந்த நடைமுறைகள் உள்ளன.

குழப்பமான  ஜி.எஸ்.டி சட்ட விதிகள் 

வணிக நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் ஜி.எஸ்.டி  விதிகள் இயற்றப்படு கின்றன; விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.இதற்குக் காரணம் மாதத்திற்கு சுமார் ரூ. 1.6  லட்சம் கோடி வரிப்பணத்தை, எந்தவித  ஊதி யமும் இல்லாமல், வரித் தொகை வசூலானாலும், வசூலாகாவிட்டாலும்  தங்கள் கையிலிருந்து செலுத்தி ஒன்றிய, மாநில அரசுகளை இயங்கச் செய் யும் தொழில் வணிகத்துறையினரை ஒன்றிய அரசு கலந்து பேசுவதில்லை.தவறான, குழப்பமான அமலாக்கத்தினால் நல்ல ஒரு வரி முறைச் சட்டம் மக்களின் எதிர்ப்பைப் பெற் றுள்ளது. ஜி.எஸ்.டி.  சட்ட விதிகளில் தெளிவு இல்லை; குழப்பங்கள்தான் அதிகம் உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு தான் ஜி.எஸ்.டி கவுன் சில் கூட்டம் இதுவரை 50 முறை நடை பெற்றிருப்பது, இந்தியாவில் உள்ள எந்த வரிச் சட்டத்திற்காகவும் இது போன்று கூட்டங்கள் நடத்தியதில்லை.

வெந்த புண்ணில்  வேல் பாய்ச்சுவது 

இச்சூழ்நிலையில் அமலாக்கத் துறை நிர்வகிக் கும் பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் ஜி.எஸ்.டி  நெட்வொர்க் (GSTN) அமைப்பைச் சேர்க்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலா கும். இந்த அனுமதியை ஒன்றிய அரசு உடனடி யாக திரும்பப்  பெற வேண்டும்.தவறு செய்யும் வணி கர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு இருப்பது போன்று, வேண்டு மென்றே சட்ட விரோதமாக வணிகர்கள் மீது நடவ டிக்கை எடுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தொழில் வணிகத் துறைக்கு அதிகாரம் வழங்கினால் லஞ்ச லாவண்யம் பெருமளவில் குறையும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. 

வணிகர்களை அச்சமூட்டும் செயல்

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜி.எஸ்.டி  சட்டத் திலேயே நடவடிக்கைகள் எடுத்துத் தண்டனை வழங்கத் தேவையான சட்ட விதிமுறைகள் உள்ளன. 

எனவே அமலாக்கத்துறையின் தலை யீடு தேவையற்றது. அச்சத்தினால் பலர்  தொழில் வணிகத்தையே விட்டு ஒதுங்கி விடுவார்கள்.ஏற்கெனவே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால், சில்லறை வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி சோர்ந்து போயிருக்கிறார்கள். இது  போன்ற காரணங்களினால் கடைகள்  குறைந்து, நாள டைவில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக் காமல் போகும் சூழ்நிலை உருவாகும்.

“வரி பயங்கரவாதம்” 

ஏற்கெனவே இருந்த பல வரிச்சட்டங் களினால் ஏற்பட்டுள்ள “வரி பயங்கர வாதத்தை” தவிர்க்கவே ஜி.எஸ்.டி வரிச்சட்டம் அமலாக்கப் படுகிறது என்று  ஒன்றிய அரசு அறிவித்தது.ஆனால்  ஜிஎஸ்டி வரிச்சட்ட அமலாக்கத்தில் ஏற்கெனவே இருக்கும் குழப்பங்களோடு, அமலாக்கத்துறைக்கும்தலையிட அனுமதி அளித்திருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி  வரிச்சட்டம் தான் “வரி பயங்கரவாதமாக” ஆகி விட்டது. 11.07.2023 அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டத்தில் இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்று உறுதியாக ஆட்சேபனையைத் தெரிவித்த தமிழ்நாடு நிதி யமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *