சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள ‘வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி’யில் முதலாம் வகுப்பு படிக்கும் சென்னையைச் சேர்ந்த இராமசாமி மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் மகள் ர.மா.தமிழினி (வயது-6) இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துச் சாதனைப் புரிந்துள்ளார். தமிழ் மொழியின் 247 மொத்த தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடல் வடிவில் சொல்லி இச்சாதனையைப் புரிந்துள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில் ஓர் சான்றிதழ், மெடல், ஒரு பேனா மற்றும் பேட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 6வயது சிறுமி ர.மா. தமிழினி அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.