காஷ்மீரில் தொடரும் காய்ச்சல் – பத்து நாளில் 16 பேர் பலி

2 Min Read

சிறிநகர், ஜன. 20- ஜம்மு – காஷ்மீரில் திடீர் காய்ச்சலால் பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந் துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த டிச. 7 முதல் ஜனவரி 17 வரை 16 பேர் ஒருவித திடீர் காய்ச்சலால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று (19.1.2025) மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

முகமது அஸ்லாம் என்பவரின் கடைசி மகனான யாஸ்மீன் கவுசார் ஜம்முவில் உள்ள எஸ்எம்ஜிஎஸ் மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுகு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் 18.1.2025 அன்று மாலை பலியானார். இவருடைய தாத்தா, பாட்டி உள்பட உடன் பிறந்த அய்ந்து பேர் கடந்த வாரம் பலியாகினர். கடந்த டிச. 7 முதல் 12 வரை இதே கிராமத்தில் வேறு இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 நபர்கள் இந்தக் காய்ச்சலுக்கு பலியாகினர்.

இந்தக் காய்ச்சல் தாக்கிய நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குள் உயிரிழப்பதற்கு முன்பு காய்ச்சல், வலி, குமட்டல், சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில வாரங்களுக்குள் 3 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் இந்தக் காய்ச்சலால் இவ்வாறு பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒன்றியய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை நியமித்தார். “ஜம்மு காஷ்மீர் சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகள் இந்த உயிரிழப்புகளை விசாரித்து வருகின்றனர். ஆனால் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உள்துறை அமைச்சர் உயர்மட்ட நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார்.

அவர்கள் இங்கு ஆய்வு செய்ய வரவுள்ளனர். இதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தவு டன் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்,” என்று லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலை யில், 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழு மாலை ரஜோரி மாவட்டத்திற்கு வந்தடைந்ததாகவும், இன்று (ஜன. 20) முதல் நகரத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள பூதல் மலை கிராமத்திற்குச் செல்ல இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடி நிவார ணம் வழங்க ஒன்றிய குழுவினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவுள்ளனர். இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்ய நாட்டின் புகழ்பெற்ற சுகாதார நிறு வனங்களின் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேறு கோணங்களிலும் விசாரிக்க காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *