கேள்வி: ஒரு தமிழர் பிரதமராக ஆகும் நாள் எப்போது வரும்?
பதில்: அவர் முதலில் ஹிந்தி கற்க வேண்டும் (‘தினமலர்’ வார மலர் 19.1.2025 பக்கம் 10)
பதிலடி: ஆக ஹிந்தி கற்றால்தான் இந்தியாவிற்கு ஒருவர் பிரதமராக வர முடியும் என்பதன் பொருள் என்ன? இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் 8ஆம் அட்டவணையில் 22 மொழிகள் குறிப்பிடப் பட்டுள்ளன. தேசிய மொழி என்று ஒன்றும் கிடையாது.
இந்த நிலையில் ஹிந்தி கற்றால்தான் ஒரு தமிழர் பிரதமர் ஆக முடியும் என்றால், இந்தியா என்றால் ஹிந்தி ஆதி பத்தியத்திற்கு உரியது என்று ’தினமலர்’ கூறுவதில் ஆச்சரியமில்லை. சமஸ்கிருதம் தான் இந்தி யாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், மனுதர்மம் தான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் ‘ஞான கங்கை’ (Bunch of Thoughts) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தி ‘தினமலர்’ பூணூலை விட்டுப் போகுமா?
சரி, ‘தினமலர்’ பதிவினை ஒரு விவாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். தேவகவுடா இந்தியாவின் பிரதமராக வந்தாரே – அவர் என்ன ஹிந்திையக் கற்றுக் கொண் டவரா? ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவரா?
அகில இந்திய காங் கிரஸ் தலைவராக காமராஜ் இருந்ததுண்டே – பிரதம ருக்கான வாய்ப்பு அவர் கதவைத் தட்டியதுண்டே! அவர் என்ன ஹிந்தியைக் கற்றவரா?
மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாருக்கும் பிரதம ராகும் வாய்ப்பு வந்தது – உண்மையல்லவா! ஹிந்தியைக் கற்காதவர் என்ற காரணத்தால்தான் அந்த வாய்ப்பு, கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதா?
வேண்டும் என்றால் ஒன்று சொல்லலாம்; இவர்கள் முழு வாய்தா காலம் – அதாவது அய்ந் தாண்டு ஆட்சி செய்ய முடியவில்லை என்று.
தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒன்றை ஒன்றிய பிஜேபி அரசு திணித்துக் கொண்டு இருக்கிறதே! அந்தக் கல்வியில் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்திய தேசியம் என் றால் ஹிந்திதான் என்றால், வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டவர்கள், ஹிந்(தீ)தி தேசியத்தைப் பற்றி என்ன முடிவுக்கு வருவார்கள்?
மக்கள் சிந்தனைக்கே விட்டு விடுவோம்!
– மயிலாடன்