திருவள்ளுவர் தினத்தன்று காவி நிறத்திலான வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ‘முரசொலி’ நாளிதழில், வெள்ளுடையில் வீற்றிருக்கும் வள்ளுவர் படம் தான் அனைவரும் ஏற்றுக்கொண்ட படம் எனவும், அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்துக்கு ஆளுநர் மரியாதை சூட்டியதாகவும் விமர்சித்துள்ளது. காவிப்பாசம் இருந்தால் முதலில் ஆளுநர் காவி உடை அணியட்டும் என்றும் சாடியுள்ளது.