பிரயாக்ராஜ்,ஜன.18- பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 16.1.2025 அன்று ஏழுமலையானின் உற்சவமூா்த்திக்கு கங்கை நதிக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் தீா்த்தவாரியை தேவஸ்தானம் நடத்தியது.
திருமலை ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா் வேணுகோபால் தீட்சிதா் தலைமையில், கங்கை நதிக்கரையில் சீனிவாச சுவாமி, சிறீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய சிலைக்கு. பால், தயிர், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் குளிப்பாட்டினர் பின்னர் ஆற்று நீர் கொண்டு கழுவினர். இதற்கு பெயர் ஸ்நாப திருமஞ்சனமாம்.
இந்த நிலையில் அங்கு கொடை கொடுக்க வருபவர்கள் பொதுவாக அங்குள்ள அகாடா எனப்படும் சாமியார் மடங்களுக்கு கொட்டி கொட்டி அழுவார்கள்.
இதில் பங்கு போடுவதற்கு நீண்ட ஆண்டுகளாகவே பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு சென்று அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து வாங்கோ சாமியைத் தரிசனம் செய்யுங்கோ என்று பார்ப்பன அர்ச்சகர்கள் அழைப்பார்கள்.
ஏற்கெனவே கோடிகளைக் கொட்ட திருப்பதி செல்ல தயங்கும் சில தனலாபக்காரர்கள் முழுக்குப் போட்ட பிறகு பெருமாளுக்கு கோடிகளைக் கொட்டுவது மேலும் புண்ணியம் சேரும் என்று எண்ணி அள்ளிக் கொடுக்கின்றனர்.
இதனால் அகாடாக்கள் எங்களின் வருமானத்தில் பங்குபோடுவதற்கே வந்துவிடுகிறார்கள் என்று உள்ளுக்குள்ளே புலம்புகிறார்கள்.
சிலரோ இது சைவப் பாரம்பரியம் இங்கே எதற்கு வைஷ்ணவ சிலை என்றும் புலம்புகின்றனர். குறிப்பாக சங்கராச்சாரியார்கள். மனவேதனை அடைகின்றனராம்.
அதாவது விதி மீறப்படுகிறதாம்!
பணம் வரும் போது விதியாவது சதியாவது!