வார்டு வாரியாக புதிய பொறுப்பாளர்கள் – வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள்: ஒசூர் மாநகர கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

அரசியல்


ஒசூர், ஜூலை 18
– ஒசூர் மாநகர திராவிடர் கழக கூட்டம் மாநகர செயலாளர் பெ.சின்னராசு தலைமையில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுகுழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றி னார்.

ஒசூர் மாநகர 45 வார்டுகளை மூன்று கிளைகளாக பிரிக்கபட்டு (ஒவ்வெரு கிளைகளுக்கும் 15 வார்டுகளை கொண்டது)அந்த கிளைகளுக்கு கீழ்க்கண்டவர்களை பொறுப்பாளராக அறிவித்தார்.பெரியார் சதுக்கம் கிளை தலைவர் து.சங்கிதா, செயலாளர் அ.கிருபா, மூவேந்தர் நகர் கிளை தலைவர் இரா.செயசந்திரன், செயலாளர் பெ.கண்ணன், சாந்திநகர் கிளை தலைவர் ப.முனுசாமி, செயலாளர் மூ.கார்திக்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் இரா.செயசந் திரன், திராவிடர் தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றி செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநகர தலைவர் வசந்தந்திரன், செயலாளர் பேராஜன், கலைத் துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுயமரியாதைச் சுடரொளி பெரியார்சுப்பிரமணியின் மகன் குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது எனவும், 

வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகரட்சி கிளை கழகங்களில் 10 இடங்களில் விரைவில் கொடிகள் கழக கொடி ஏற்றுவது எனவும் தீர்மானிக்கபட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *