வெட்கமாக இல்லையா?

2 Min Read

ஆரிய இன பாசம் கொண்ட பாரதி தமிழர்களுக்கு முப்பாட்டானாம் – அடப்பாவி உனக்கு வேற யாருமே கிடைக்கலையா……
ஆரியருக்கு தாசர் மகன் சூத்திரன் என்பதை நிறுவுகிறார் சீமான்.. அதுவும் தமிழர்கள் சூத்திரன் என்பதை….

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முற்றே உலகு”

என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே சென்றுவிட்டார் – அவர் பார்வையில் அது தாயும் தந்தையும்.

ஆனால் அது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை.

ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.அதுவும் கூட ஏற்புடையதல்ல)

2. தமிழுக்கு இலக்கணம் இல்லாமல் இருந்தது போலவும் அதை செய்தவர் அகத்தியர் என்றும் , அந்த அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்றும் அவர் பூணூல் அணிந்த ஆரியர் என்றும் வன்மம் கக்குகிறார்.

3. ஆன்ற மொழிகளில் – உலகில் இருக்கக் கூடிய மொழிகளில் சிறந்த மொழி ஆரியம் – சமஸ்கிருதம் – அந்த மொழிக்கு நிகரான மொழியாம் – தமிழ் – அடேய் பாத்தியா அவன் எவ்ளோ பெரிய ஆப்பு சொருகி தமிழை சிறுமைப்படுத்தி இருக்கான் – நீ அந்த நபரை தூக்கிட்டு வர..அவனை முப்பாட்டன் என சொல்ற.. கியாரே செட்டிங்கா!!

நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (ஸம் என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.
இப்படி ஆரிய சமஸ்கிருத மொழியை கொண்டாடிய – தூக்கிப்பிடித்த பாரதிய ஜனதா பார்ட்டி பாரதியா தமிழர்களின் முப்பாட்டனா?… வெட்கமாக இல்லையா சீமான் அவர்களே….

– சமூக வலைதளப் பதிவிலிருந்து…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *