புதுடில்லி, ஜன.17- சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கைதானவர்களை சிறை யிலேயே வைத்திருக்க அமலாக்கத்துறை விரும்பு வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ரூ.1,000 கோடி மோசடி
உத்தரப்பிரதேச தலை நகர் ஷைன் சிட்டி குரூப் என்ற நிறுவனம், மோசடி முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி வசூலித்து மோசடி செய்தது. இதுதொடர்பாக அதன் உரிமையாளருக்கு நெருக்கமான சசி பாலா என்ற ஆசிரியை, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம லாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து சிறையில் இருந்து வரு கிறார்.
அவர் பெயரில் அசையா சொத்துகள் இருப்பது கண்டறியப்பட் டது. அவரது ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா தலைமை யிலான அமர்வு முன்பு கடந்த மாதம் 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட் டத்தின் 45-ஆவது பிரிவின்கீழ் விதிக்கப்படும் கடுமையான ஜாமீன் நிபந்தனைகள், 16 வயதுக்கு உட்பட்டோர், பெண்கள், உடல்நலம் குன்றியோர் ஆகியோராக இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும் என்று வாதிட் டார்.இதற்கிடையே, இம்மனு, நேற்று முன்தினம் (15.1.2025) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக் கத்துறைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரி வித்தனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட் டத்தின் 45-ஆவது பிரிவு, பெண்கள் உள் ளிட்ட சில பிரிவின ருக்கு கடுமையான நிபந் தனைகளில் இருந்து விலக்கு அளிக்கிறது. ஆனால் அந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களே தெரியாதவர்கள், ஒன்றிய அரசு சார்பில் ஆஜரா கிறார்கள். சட்டம் தெரியாதவர்கள் ஏன் ஆஜராக வேண்டும்?
அவர்கள் கூறுவது சட்டத்துக்கு முரணானது. சட்டத்துக்கு முரணான வாதங்கள் வைப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அப்போது, ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக, அந்த வழக்குரைஞர் கவனக் குறைவாக தவறு செய்து விட்டார்.. அதற்கு மன்னிப்பு கேட் டுக்கொள்கிறேன்” என்று கூறினார். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:- அந்த வழக்குரைஞரின் வாதத்தை பார்த் தால், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதானவர் களை சிறையிலேயே வைத்திருக்க அம லாக்கத்துறை விரும் புவது தெரிகிறது. தகவல் தொடர்பு இடைவெளி என்ற பேச்சுக்கே இட மில்லை. சட் டத்துக்கு முரணான, அற்பமான வாதங்களை வைத்தால், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.இவ் வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், கைதான ஆசிரியை சசி பாலாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிப திகள் உத்தரவிட்டனர். அவர் ஏற்கெனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து விட்டதாலும், இப்போ தைக்கு விசாரணை முடி வடையாது என்பதாலும் விசாரணை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சசி பாலாவை விடுதலை செய்யலாம் என்று உத்தரவிட்டனர். சசி பாலாவின் கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிட் டனர்.