புதுடில்லி, ஜன.17 நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப் படுகிறது.
அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி செவிலியர் படிப்புக்கும் நீட் தோ்வு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.
அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு வருகிற மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்காக neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வழியே மாணவர்கள் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்த முக்கிய ஆவணங்கள் இந்த தளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அனைத்துத் தகவல்களுக்கும் இந்த இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.