தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பாக கணியூரில் திராவிடர் திருநாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் மாபெரும் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு நா.செல்வராஜ் மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் தலைமையேற்றும் வரவேற்புரை மாவட்ட திராவிட தொழிலாளர் அணியைச் சேர்ந்த சிவகுமாரும், நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ. தம்பி பிரபாகரனும், மாவட்ட தலைவர் க. கிருஷ்ணனும் தொடக்க உரையாற்றினர். விழாபேருரை தஞ்சை இரா.பெரியார்செல்வன் தம் உரையில் ஆரிய பண்பாட்டு படையெடுப்பு இன்று ஆர்.எஸ்.எஸ். கூட்டு வைத்துக்கொண்டு பெரியாரை அவமரியாதை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதையும் அவர்கள் முயற்சி தோல்வியில்தான் முடியும் என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்தார். கணியூரில் உள்ள பொதுமக்கள் மிக கவனமாக கேட்டு கருத்து தெளிவுபெற்றனர் இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் புள்ளியான், மாவட்ட துணைத்தலைவர் ச.ஆறுமுகம் மாவட்ட துணை செயலாளர் நா.மாயவன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், தாராபுரம் நகர செயலாளர் சா.சித்திக் பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் சபரிகிரி, செயலாளர் ஓவியர் பு.முருகேசு, காந்தி, இளைஞரணி தலைவர் தென்றல் பொதுக்குழு உறுப்பினர் மயில்சாமி வழக்குரைஞர் சக்திவேல், அர்ஜீனன் கலந்துகொண்டனர் இறுதியாக நன்றியுரை பழ. நாகராசன் கூறினார்.
பொங்கல் விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட வேண்டும்? மாபெரும் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்

Leave a Comment