கும்பமேளாவிற்கு வருகை புரிந்துள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தமது 13 வயது மகளை அங்குள்ள கோவிலில் உள்ள சிலைக்குக் (கணவனாம்) கன்னிகா தானம் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்; அதாவது இந்தச் சிறுமி தேவதாசி ஆக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹிந்தி செய்தி நிறு வனமான என்.டி.டி.வி. நிறுவனம் ஸநாதனம் குறித்து பெருமையோடு விவரித்துள்ளது.
கும்பமேளா பெரும்பான்மை ஹிந்துக்க ளின் நம்பிக்கை தொடர்பான விவகாரம் என்பதால், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்போ, ஒன்றிய, மாநில அரசோ எந்த ஒரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வெளிவந்தது ஒன்றுமட்டுமே, இப்படி இன்னும் எத்தனை நடந்துள்ளதோ? அங்குள்ள கோவில்களையும் அதைச் சார்ந்த மடங்களில் உள்ள பெண்கள் குறித்து ஆய்வு செய்தால் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்.
சிந்திக்க வேண்டாமா?
ஹிந்து மதம்பற்றிப் பேசினால் பற்றிக்கொண்டு எரிவதுபோல் ஆவேசக் கூச்சல் போடும் அறிவிலிகள் இதைப்பற்றி யெல்லாம் சிந்திக்க வேண்டாமா?