கிராமிய கலைஞர்களின் ஊதியத்தை ரூ.5,000ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த நிகழ்ச்சியில் தற்போது 1,500 கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்று இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த கலைஞர்களுக்கு தங்குமிடம், உணவு, 2 உடைகள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு கூறியுள்ளது.