ஆவடி, ஜன. 16- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம் இல்லத்தில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சென்னகிருட்டிணன் கடவுள் மறுப்பு கூற துவங்கியது.கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கழக தலைவர் வெ.கார்வேந்தன் உரையாற்றிய பின் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு துணை செயலாளர் மு.ரகுபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், துணைத் தலைவர் சி.வச்சிரவேல், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், திருநின்றவூர் பகுதி செயலாளர் கீதா ராமதுரை பெரியார் பெருந் தொண்டர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
எ.கண்ணன், பூவிருந்தவல்லி நகர செயலாளர் தி.மணிமாறன், திருநின்றவூர் ராணி ரகுபதி, கன்னடபாளையம் தமிழரசன், சுந்தர்ராஜன், பசுபதி, சின்னதுரை, சிறீ நிவாஸ், பிரபாகரன், அரிகிருஷ்ணன், திராவிட மணி, சு.மோகன்ராஜ், அறிவு வழி காணொலி அரும் பாக்கம் சா.தாமோதரன், அரும்பாக்கம் வழக்குரைஞர் ராஜா, அரிகிருஷ்ணன் ,பெரியார் பிஞ்சு தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து கழக தோழர்கள் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம் ஏற்பாட்டில் ஊர் வலமாக முழக்கமிட்டு வந்தனர்.