டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

1 Min Read

சென்னை, ஜன.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, ‘தாட்கோ’ சார்பில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதி திரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழ கம் முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க உள்ளது.

குரூப்-2 மற்றும் 2-ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவி களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdoc.com என்ற முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதி வேற்றம் செய்து கொள்ள லாம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *