ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான,
ஜி.எஸ்.டி., கவுன்சிலில், வரி விதிப்பு சம் பந்தமான பரிந்துரையில், மசாலா பாப்கார்னுக்கு,12 சதவீதமும், இனிப்பு பாப்கார்னுக்கு 18 சதவீதமும்
ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு உள்ளது!
எதற்குத்தான் ஜி.எஸ். ‘வரி விதிப்பது என்று இல்லையா…
ஏற்கெனவே, வாடகை இடத்திற்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய, வணிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரெடிமேடு ஆடைகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி என்பது என்ன நியாயம்?
ஜி.எஸ்.டி., தவிர, வேறு வரி வருவாய் இல்லையா ஒன்றிய நிதித்துறைக்கு? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அவ்வப்போது தனியார் நிறுவனங்களிலும், அரசியல் வாதிகளின் வீடுகளிலும் சோதனை செய்து, கணக்கில் காட்டாத சொத்துக் களை பறிமுதல் செய்வதும் வருவாய் தானே…
நிதி நிறுவன மோசடி களில் பறி முதல் செய் யப்படும் முறைகேடான சொத்துக்களுக்கு தீர்வு உண்டா?
நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில் கூட, லாபம் தானே அதிகம் வருகிறது!
ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பொருட் களின் விலை ஏறுகிறது; விலை வாசி உயர்வால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான் என்பதை நிதியமைச்சர் நினைவில் வைத்து, வரி விதிப்பில், கொஞ்சம், நியாய, தர்மம் பார்க்கவேண்டும்
– ‘தினமலர்’, 11.01.2025