டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மசோதா தாக்கல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில். ஒன்றிய அரசு மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்: எதிர்க்கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.
* நானும் மனிதன் தான்; நான் கடவுள் அல்ல, நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒப்புக் கொண்டார் பிரதமர் மோடி.
* எரிந்த ஓஎம்ஆர் தாள்கள், நீட் நுழைவு சீட்டுகளுடன் பாட்னா மருத்துவ மாணவரை கைது செய்தது பீகார் காவல்துறை. கடந்த ஆண்டு நீட் யு.ஜி. வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணை.
* 2024 தேர்தலுக்கு முன்பு “கடவுளால் அனுப்பப்பட் டவர்” என்ற தனது முந்தைய கூற்றை மாற்றிய மைக்கும் முயற்சியாக மோடி தற்போது நான் மனிதன் தான் என்று கூறியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப அழைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ஆர். ஜெயா சுகின் மனு தாக்கல்
தி இந்து:
* வரும் 20ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு
தி டெலிகிராப்:
* இந்திய ரூபாய் வீழ்ச்சியின் கார்ட்டூன்கள் மற்றும் மீம்ஸ்கள் X இல் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு வரைபடம் மோடியின் யோகா ஆசனங்களுடன் இணைக்கப்பட்ட ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை காட்டியது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு
* ‘ஹிந்தி தேசிய மொழி அல்ல’: தமிழ்நாட்டில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அது வெறும் ஒரு அதிகாரப்பூர்வ மொழி என மேனாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
– குடந்தை கருணா