வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை, சுப்ரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் 7.1.2025 மற்றும் 8.1.2025 ஆகிய நாட்களில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுக் கோப்பைகளை வென்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெருமையும் புகழும் பெற்றுத் தந்தனர். கையுந்து பந்து போட்டியில் முதலிடம், எறிபந்து போட்டியில் முதலிடம், வளைபந்து போட்டியில் இரண்டாமிடம், பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம், கபடி போட்டியில் இரண்டாமிடம், கோ-கோ போட்டியில் இரண்டாமிடம் ஆகிய பரிசுகளை வென்று விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த மாணவிகளை இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.