யூஜிசி விதிமுறைகள் என்ற பெயரில் தேசியக் கல்விக் கொள்கைகளைத் திணிக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாணவர் இயக்கங்கள்ஆர்ப்பாட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜன. 11- யூஜிசி விதிமுறைகள் என்ற பெயரில் தேசியக் கல்விக் கொள்கைகளைத் திணித்து, மாநில உரிமைகளைப் பறிக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) ஒருங்கிணைப்பில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (10.01.2025) காலை 10 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள ரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் யூ.ஜி.சி. பெயராலே மாநில கல்விக் கொள்கையில் தலையிடும் போக்கை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பின் மாநில செயலாளர் பா. தினேஷ் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் SFI யின் பொறுப்பாளருமான அரவிந்த் சாமி தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மருத்துவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூர்பாண்டியன், முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பெ.செஞ்சுடர், மதிமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் கவிஞர் வி.ஏ முகமது, சமூக நீதி மாணவர் இயக்க மாநில பொருளாளர் அப்துல் அஜீஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொருளாளர் சையது யாசித் ரகுமான், மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் ச.பஷீர் அகமது, ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

SFI மிருதுளா, திராவிடர் கழகம் செ.பெ தொண்டறம், தி.மு.க திருப்பூர் வீரமணி, AISF சவுமியா ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்கினர். மோகன் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரா விடர் கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, ராமாபுரம் ஜனார்த் தனன், பெரியார் நூலக வாசகர் வட்டம் தென்மாறன் அரும்பாக்கம் தாமோதரன், யாழினி, மாநில கழக இளைஞரணி செய லாளர் நாகை நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், ஊற்றங்கரை நிலவன், ஆவடி மாட்ட துணைச் செயலாளர் சென்னகிருட்டிணன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் தொண்டறம், பிரபாகரன், சிறீநிவாஸ், பசுபதி, சின்ன துரை, ராஜேஷ், விஷ்வா, கோகுல், காசி வினோத், காசி விகாஷ், சஞ்சய், ஆகாஷ், நிதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *