மகாராட்டிராவில் முதல் முறையாக பெண் விவசாயிகள் மாநில மாநாடு!

2 Min Read

மும்பை, ஜன.11 கடந்த வாரம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராட்டிரா மாநிலக்குழு, நாசிக் நகரில் உள்ள தோழர் கோதாவரி பருலேகர் மண்டபத்தில் பெண் விவசாயிகளின் மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. பெண் விவசாயிகளுக்காக மாநில மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை ஆகும்.
அதிக அளவில் விவசாயப் பெண்கள் அணிதிரண்டனர்

மகாராட்டிராவின் 15 மாவட்டங் களில் இருந்து மொத்தம் 515 பிரதிநிதிகள் (443 பெண்கள் மற்றும் 72 ஆண்கள்) ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானே-பால்கர், அகமதுநகர் மற்றும் நாசிக் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் விவசாயப் பெண்கள் அணிதிரண்டனர்.

கொடியேற்ற நிகழ்விற்கு பிறகு அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் உமேஷ் தேஷ்முக் வர வேற்பு உரையாற்றினார். தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அஜித் நாவலே மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விளக்க உரை யாற்றினார்.

தலைமைக்குழுவில்
5 பெண்கள்

மாநாட்டை வழிநடத்தும் தலைமைக்குழுவில் 5 பெண்கள் இடம் பெற்றனர். மாநாட்டை அகில இந்திய மாதர் சங்கப் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே தொடங்கி வைத்தார். மகிளா கிசான் அதிகார மஞ்ச் (மகம்) சீமா குல்கர்னி கலந்து கொண்டு உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் கவிதா வேர் 17 அம்ச கோரிக்கை தீர்மானத்தை முன் வைத்தார்.

இந்திய தொழிற் சங்கங்களின் மய்யம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய மாணவர் மற்றும் வாலிபர் சங்க பிரதிநிதிகள் உள்பட விவசாயிகளின் சங்கம் சார்பாக 21 பெண் பிரதிநிதிகள், கோரிக்கைகள் தீர்மானத்தின் மீது முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

மாநாட்டை சிஅய்டியு துணைத் தலைவர் டாக்டர் டி.எல்.காரட், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் நிகோல் (தஹானு), சிஅய்டியு உழைக்கும் மகளிரணித் தலைவர்கள் சுபா ஷமிம், ஆனந்தி அவகாடே, மாதர் சங்க மாநிலத் தலைவர் நசீமா ஷேக், மாணவர் சங்க மாநில தலைவர் சோம்நாத் நிர்மல், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் தத்தா சவான் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவருமான அசோக் தாவ்லே நிறைவுரையாற்றினார்.

இந்த மாநாடு குறித்த சிறு புத்தகத்தை வெளியிடவும், மகாராட்டிரா கிராமங்களில் கோரிக்கை தீர்மானத்தை பிரபலப்படுத்தவும், மாவட்ட அளவிலான பெண் விவசாயிகளின் மாநாடுகளை நடத்தவும், கோரிக்கைகள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *