டில்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரூ.25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் கூறும்போது, “ஜீவன் ரக்ஷா யோஜனா” என்ற பெயரில் இந்த திட்டம் அமல் படுத்தப்படும் என உறுதி அளித்தார். டில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க., ஆம். ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.