புதுச்சேரி, ஜன. 8- தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு மரியாதை கொடுக்காத தமிழ்நாடு ஆளுநரை, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டமன்றத்தில் உரையாற்ற வரும் போது பல காரணங்களை கூறி உரையாற்றாமல் சென்றுள்ளார்.
பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தற்போதும் அதே நிகழ்வு நடந்துள்ளது. வேண்டும் என்றே தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், மக்களுக்-கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்கனவே வெளிநடப்பு செய்ய முடிவு செய்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியே வந்துள்ளார். தேசிய கீதம் பாடப் படவில்லை என்ற ஒரு சாக்குப் போக்கு கூறி வெளியேறி யுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு முதலமைச்சரையும், மக்களையும் ஆளுநர் அவம-தித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்க தவறிவிட்டார். இத-னால் ஆளுநர் ஆர்என்.ரவியை பதவியில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்கி புதிய ஆளுநரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.