சென்னை, டிச.4 தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் கூறியதாவது:
மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறி யப்பட்டால் உரிய விசாரணைக்கு உத்தர விடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை உற்பத்தி செய்த 64 மருந்து நிறுவ னங்கள் மீது வழக்குத் தொடர மாவட்ட மருந் துக் கட்டுப்பாட்டு அதி காரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அந்த மருந்துகளில் பெரும்பாலானவை உத்தராகண்ட், இமா சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. அந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி அதற்கான விளக் கத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். நீதிமன்ற உத்தரவுப் படி அடுத்தகட்ட நட வடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.