பார்ப்பனப் பத்திரிகைகள்

2 Min Read

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்து கிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினாமாக் களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினாமாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது.இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தை கூட எழுத வில்லை.

ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை காந்தியாரிடம் கொண்டு போய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ் நாடே முழுகிவிடும் என்று சொல்லி காந்தியாரையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வரு கிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? உணரவில்லையா?

ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்! பார்ப்பனரல்லாத பத்திரிகைளை பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது.ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினை யுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் ‘‘பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை’’ என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

– குடிஅரசு – குறிப்பு, 11.07.1926

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *