தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் – கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வமுள்ள 50 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 16ஆம் தேதி முதல் பெங்களூருவில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.