சென்னை, ஜன.3 கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஒரு சில இடங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்வது தொடர்கிறது.
இதற்கிடையே, கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று (2.11.2025) ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் 8ஆம் தேதி வரையில் தமிழ்நாடு புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் இருக்கும். 7, 8ஆம் தேதிகளில் கடலோர தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கிழக்கு திசை காற்று வேகமாறுபாடு; தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு
Leave a Comment