சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம் துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

2 Min Read

சென்னை, ஜன.2 “சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பய ணிப்போம் என்ற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பு்ததாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: ‘2024-ஆம் ஆண்டு பல்வேறு புதுமைகளையும் – அனுபவங்களையும் நினைவு களையும் நமக்குத் தந்துவிட்டு விடைபெறுகிறது. 2025-ஆம் ஆண்டு புத்தாண்டில், முக்கடல் கூடும் குமரியில் நம் ‘திராவிட மாடல் அரசு’ நடத்திய ‘திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா’-விலிருந்து தொடங்குகிறது.

இளைஞர் அணி மாநாடு

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல் அரசு 2024-இல் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கும்-வளர்ச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களைச் செயல் படுத்தியிருக்கிறது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

2024-இன் தொடக்கத்திலேயே லட்சோப லட்சம் இளைஞர்கள் பங்கேற்புடன் இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் கழக இளைஞர் அணியின் மாநில மாநாட்டை நடத்தியதை, இன்று நினைத்துப் பார்க்கிறோம்.

2024 -மக்களவைத் தேர்தல் களத்தில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் பாசிச சக்திகளையும் அடிமைகளையும் வீழ்த்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் தி.மு.க. பாதுகாத்தது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில், தமிழ்நாடெங்கும் துறை ரீதியிலான ஆய்வு, மக்கள் நலத்திட்டங்கள் வழங்குதல் – புயல், மழை நேரத்தில், மக்களுடன் களப்பணியாற்றிய தருணங்கள் என, ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை என்கிற அளவுக்கு 2024-இல் சுற்றிச்சுழன்று பணியாற்றியிருக்கிறோம்.

கலைஞர் நூற்றாண்டில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தி, 182 இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, தி.மு.க. தலைவர் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கலைஞர் நூலகங்களைத் திறந்திருக்கிறோம்.

200 தொகுதிகளில் வெற்றி

இந்தப் பணிகள் அனைத்தும் புதிய உத்வேகத்துடன் பிறக்கும் 2025-ஆம் ஆண்டிலும் தொடரும்! நம் திமு.க.வையும், தி.மு.க. அரசையும், நம் தலைவரையும் தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இது முத்தமிழறிஞர் கலைஞர் உழைப்பால், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் வியர்வையால், தியாகத்தால் உண்டான பந்தம். புழுதிகளால் சூரியனை மறைக்க முடியாது.

2026-இல் நம் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் பெறவிருக்கும் மாபெரும் வெற்றிக்கு 2025-ஆம் ஆண்டு நாம் ஆற்றப் போகும் களப்பணி ஆதாரமாக விளங்கட்டும்!

தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனை களுக்கு இடமளிக்காமல் – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என்ற முற்போக்குப் பாதையில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத் கரம் பற்றி நாம் பயணிப்போம் என்கிற உறுதியோடும் நம்பிக்கையோடும் புத்தாண்டை வரவேற்போம்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *