கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.12.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*திமுக – இடதுசாரிகள் உறவு, தேர்தல் கூட்டணிக்கு அப்பாலும் நிலைத்து நிற்கும், நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். * ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி உருவாகியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களை அந்த மாவட்டத்தில் தொடங்கியதன் மூலம், இடைத் தேர்தல் பணியை திமுக தொடங்கி விட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 21ஆம் நூற்றாண்டில் பாசிசம் என்ற தலைப்பில் அய்தராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விவாதித்தனர். இந்த கருத்தரங்கை அரவிந்த் மெமோரியல் டிரஸ்ட் ஏற்பாடு செய்து இருந்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இன்று டிசம்பர் 30ஆம் தேதி பஞ்சாபில் மறியல் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். போராட்டம் மாநிலம் தழுவிய ஆதரவைப் பெறுகிறது * 2027 உ.பி. தேர்தலுக்கு முன்னதாக கோவில்-மசூதி தகராறுகள் வாக்காளர்களை மதரீதியாக ஒருமுகப் படுத்துவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது. நடைபெற்ற இடைத்தேர்தலில், முதலமைச்சர் யோகி, பிரிந்தால் நாம் அழிந்து விடுவோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றார் என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தி டெலிகிராப்:

* பகவத் கீதையின் மகத்துவம் குறித்து நான்கு படிப்புகளுக்கு டில்லி பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது, மதச் சார்பற்ற கல்வி நிறுவனத்தின் பன்மைத்துவ நெறி முறைகளுக்கு எதிரானது என சில கல்வியாளர்கள் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*சம்பல் மாவட்டத்தில் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் இல்லத்தில் சிவலிங்கம் இருக்கலாம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் செய்தியாளர் சந்திப்பில் கிண்டலாக தெரிவித்தார். .- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *