தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி!
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு – நூல் வெளியீடு!
விளாத்திகுளம், டிச. 29- 27.12.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கோ. முருகன் அனைவரையும் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் பி .ஞானராஜ், சிபிஅய் நகர செயலாளர் முள்ளான், ஆதித்தமிழர் பேரவை பாஸ்கர், விசிக மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன், திராவிடர் கழக மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் த. நாகராஜ், கழக காப்பாளர் சு காசி, ஆகி யோர் கருத்துரை வழங்கினார்கள்.
அன்னை ஈ.வெ.ரா.மணிம்மையா ரின் தொண்டறம் ,வாழ்வியல் சிந்த னைகள்18ஆம்பாகம் நூலினை அறிமுகம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் உரையாற்றினார். சிபிஎம் நகர செயலாளர் ஜோதி நூல்களை வெளியிட்டார். தோழர்கள் பெற்று மகிழ்ந்தனர்.
கழக காப்பாளர் மா .பால் ராசேந்திரம் பார்ப்பன ஆதிக்கத்தை அழித்தொழிக்க நீதிக்கட்சி தொடங்கி சமூக நீதிக் கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் வரை எடுத்த முயற்சிகளை பட்டிய லிட்டு தொடக்க உரையாற்றினார்.
நிறைவாக சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் நாகை மு.இளமாறன் அறிவுலக பேராசான் தந்தை பெரியாரின் பெருந் தொண்டினை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற பணிகளையும், அதன் மூலம் தமிழ் பெருமக்கள் பெற்றிருக்கும் உயர்வுகளையும் , திராவிட மாடல் ஆட்சி 2026-லும் தொடரும் என்பதற்கான சாதனைகளையும் விளக்கி சிறப்பாகஉரையாற்றினார்
இறுதியில் புதூர் கழகத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.