தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024)
‘‘பெரியார் சிந்தனைகளை” வங்க மொழியில் மொழி பெயர்த்த சுப்ரியா தருண்லேகா பந்தோபத்யாயா, பஞ்சாபியில் மொழி பெயர்த்த முனைவர் ஜஸ்வந்த்ராஜ், மலையாளத்தில் பல நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுவரும் லால்சலாம், ஒடியாவில்் மொழி பெயர்த்த தானேஸ்வர் சாகு ஆகிய நால்வருக்கும் திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார்.
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டில் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள்!