சீரிய பகுத்தறிவாள ரும், பெரியார் வழி நாளும் நடை போடுபவரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளரும், தனது பள்ளி வளாகத்திலேயே தந்தை பெரியார் சிலை, பெரியார் கலையரங்கம் நிறுவியவரும், நமது இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவருமான சிந்தை
மு. இராசேந்திரன் நேற்று (25.12.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தில் பல முறை உரையாற்றியுள்ளோம்.
அவர் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; பகுத்தறிவு இயக்கத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகும்.
‘அவர் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பெரியார் வாசகர் வட்டத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியறிந்து அவரது வாழ்விணையர் பாரதி, மகள் அமுதினி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.