26.12.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியார் 1924இல் பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றாண்டு விழா; காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
* அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் அம்பேத்கரின் அச்சத்தை மோடி அரசு உண்மையாக்கியுள்ளது, காங்கிரஸ் மேனாள் தலைவர் பி.கே.சந்திரசேகர் கண்டனம். அரசமைப்புச் சட்டத்தையும், மேனாள் பிரதமர் நேருவையும் பாஜக இழிவுபடுத்தும் போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் அதை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தல்
தி டெலிகிராப்
* அய்அய்எம் பெங்களூரு ஆளுநர் குழுவில் உறுப்பினருக்கானத் தேர்தலில், வாக்களிப்பதற்காக மூன்று வேட்பாளர்கள் கொண்ட குழுவில் ஜாதி-பாகுபாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேராசிரியர்களை சேர்த்தது குறித்து, அய்அய்எம்-பியின் இயக்குநர் ரிஷிகேஷா டி.கிருஷ்ணன் மீது, பிசினஸ்-பள்ளிகளின் மேனாள் மாணவர்களின் பன்னாட்டு வலையமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
* 2023-2024இல் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.20,000 மற்றும் அதற்கு மேல் நன்கொடையாக ரூ.2,244 கோடியை பாஜகவும், காங்கிரஸ் ரூ.288.9 கோடியும் பெற்றுள்ளன. முந்தைய ஆண்டை விட 2023-2024இல் பாஜக பங்களிப்பு 212 விழுக்காடு அதிகரித்துள்ளது.
– குடந்தை கருணா