இயற்கையில் கிடைக்கும் மின்னொளி

1 Min Read

இரவு நேரச் சாலைகளில் பயணம் செய்யும்போது சாலை ஓரங்கள், நடுக்கோடுகள் ஆகியவை நம் வாகனத்தின் ஒளி பட்டவுடன் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். எல்லா இடங்களிலும் மின் விளக்கு பொருத்த மின்சாரம் அதிகளவு தேவைப்படும்.

அதைக் குறைக்கவே இவ்வாறான ஒளிரும் பெயின்ட்கள் பயன்படுகின்றன. ஆனால் இவை, ஒளி படாவிட்டால் ஒளிராது. நடந்து செல்பவர்களுக்கு உதவாது. இதை மனத்தில் வைத்தே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இயற்கை வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
சில வகை காளான்கள் மரங்களில் உள்ள சத்துக்களை உண்டு ஒளிரும் இயல்பைக் கொண்டுள்ளன. இவற்றைச் சாலை ஓரங்களில் வளர்க்கலாம் என்று முடிவு செய்தனர். பஸ்லா மரம் (Balsa wood) எனும் மரத்தின் துண்டுகளையும், தேன் காளானையும் (டெசார்மில்லாரியா டேபெஸ்கென்ஸ்) இணைத்து இதை உருவாக்கி உள்ளனர். இவை 10 நாட்கள் தொடர்ந்து 560 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட அழகிய பச்சை நிறத்தில் ஒளிரும்.

காளானையும், மரக்கட்டையையும் மூன்று மாதங்கள் ஈரப்பதமுள்ள சூழலில் வளர விட்டனர். மரக்கட்டை தன் எடையை விட 8 மடங்கு அதிக நீரை உறிஞ்சிக் கொண்டது. இதன்மீது ஆக்சிஜன் பட்டதும் ஒளிர்ந்தது. லுாசிபெரேஸ் எனும் நொதி தான் இந்த ஒளிர்வுக்குக் காரணம்.
இதை வீடு, வணிக வளாகங்களில் அழகுக்காகவும் வைத்துக்கொள்ளலாம். இதே போல் உயிருள்ள தாவரங்களை இந்தமுறையில் ஒளிர வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவ்வாறு செய்தால், மின்விளக்குகள் பயன்பாட்டை ஓரளவு குறைக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *