பேராசிரியர் மு.நாகநாதன்
தீயினால் சுட்டப்புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு (குறள் – 129)
தீயினால் சுட்ட புண் உடலின் புறத்தே வடுவை உண்டாக்கினாலும் அதனால் ஏற்படும் வருத்தம் மனதினுள்ளே ஆறிவிடும். ஆனால், நாவினால் தீய சொற்களின் மூலம் மனதைச் சுட்ட புண் உள்ளத்தின்கண் எப்பொழுதும் ஆறாமலேயே இருக்கும் (நாவலர் உரை)
தலைக்கேறிய ஸநாதன வெறி, உள்ளத்தில் ஊறிய எரிச்சல் நாக்கில் ஏற்பட்ட தாங்கமுடியாத அரிப்பு வெறுப்பாக நாடாளுமன்றத்தில் வெளிவந்துவிட்டது.
வாக்கு அரசியலுக்காக பிரதமர் நரேந்திரர், அண்ணல் அம்பேத்கர் மீது காட்டியப் பாச உரைகள் எல்லாம் பாசிச உரைகளே என்று போட்டு உடைத்துவிட்டார் அமித் ஷா.
அறிவுப் பெட்டகம்
பாஜக சமூக நீதி முகமூடி நாடெங்கும் கழன்று தொங்குகிறது. பாசிசச் சங்கிகளுக்குத் தெரிந்தது இரண்டே ஒன்று கையினால் சுடுவது இரண்டு நாவினால் சுடுவது அன்று காந்தியார் தொடங்கி இன்று கவுரி லங்கேஷ் வரை கையினால் சுடுவது தொடர்கிறது.
இன்று அண்ணல் அம்பேத்கரை நாவினால் சுட்டுள்ளனர்.
அம்பேத்கரின் உயரம் அறியாத குள்ளர்கள் அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வியின் உச்சம். அறிவின் எல்லையைத் தொட்ட உலகின் சில அறிஞர்களில் ஒருவர்.
அம்பேத்கரின் ஓவ்வொரு சொல்லும் ஒவ்வொரு உரையும் மானுட விடுதலைக்கான அறிவுப் பெட்டகம்.
அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் தமிழ்நாடு தனி இடம் வகிக்கிறது.
தந்தை பெரியாரை வைக்கம் கோயில் நுழைவுக் களத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றதைப் பாராட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியது மட்டுமல்லாமல், அத்தகைய அரிய செயலைச் செய்து காட்டியவர்.
சில நாட்களுக்கு முன்பு ஆங்கில இந்து நாளிதழில் ஒரு சிறிய பெட்டி செய்தி இதற்குச் சான்றுபகிர்கின்றது.
1944 ஆம் ஆண்டில் சென்னைக்கு அண்ணல் அம்பேத்கர் வந்தபோது இரயில்வே துறையில் பணியாற்றிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட ஊழியர்கள் ஒன்றாக இணைந்து அவரைச் சந் தித்து ஒரு கோரிக்கை விண்ணப்பத்தை அளிக்கி றார்கள். விண்ணப்பத்தைப் பெற் றுக் கொண்ட அறிஞர் அம் பேத்கர் குறிப்பிட்டது என்ன தெரியுமா?
” முதன் முதலாகச் சென் னையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் பொது நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”
(Tamilnadu in Focus -The Hindu – dated 20-12-2024 page 6)
மற்றொரு நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீடு ஆணையை 1948 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி விரிவுப்படுத்தினார்.
1951 ஆம் ஆண்டில் இந்த ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பினை வழங்கின.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் பெரும் களம் அமைக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் எல்லோரும் ஓரணியில் திரண்டனர். தமிழ்நாடே கொந்தளித்தது.
சட்டத் திருத்தம்
மக்களின் உரிமைகளை உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிரதமர் நேரு இடஒதுக்கீடு ஆணையை உறுதி செய்வதற்கு முதல் அரசமைப்புச் சட்டத் திருத்ததை நிறைவேற்றினார்.
இந்த நிகழ்வுகளைச் சுட்டி “இந்தியா மறந்த வழக்குகள்” என்ற தலைப்பில் ஒரு நூலை வழக்குரைஞர் சிந்தன் சந்திர சூட் எழுதியுள்ளார்.
இவர் யார்?
கடவுளிடம் பேசி பாபர் மசூதி வழக்கில் இராமன் கோயில் கட்டுவதற்கு அனுமதி பெற்றுத் தீர்ப்பினை எழுதிய மேனாள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட்டின் மகன் தான் சிந்தன் சந்திர சூட். சிந்தன் அம்பேத்கர் உரையினை இந்நூலில் எடுத்து மேற்கோள் காட்டி உள்ளார்.
“உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் கருத்தியலையும் நோக்கையும் தவறாகப் பொருள் கொண்டுள்ளது.”
“டாக்டர் அம்பேத்கர் இதற்கு உரிய வாதத்தை வலிமையான முறையில் வைத்தார்.”
“உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் பின் தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக எடுத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத் தின் அமைப்பு முறையைத் தவறான முறையில் விளக்கம் அளித்துள்ளது”
இது போன்ற விளக்கங்களை அளித்துள்ள சிந்தன் சந்திர சூட், அம்பேத்கரின் நூறு நிமிட உரை நாடாளுமன்றத்தில் ஒலித்த மிகச் சிறந்த உரை என்று எழுதியுள்ளார்.
This speech, lasting over a hundred minutes,was described as ‘one of the most outstanding debating performances witnessed in this Parliament..(The Cases That India Forgot -Chintan Chandrachud -Juggernaut-2019 – pages 123&124)
இவ்வாறு சட்டயியலின் வல்லுநராக, பொருளாதார மேதையாக, பகுத்தறிவு அரிமாவாக, சமூகவியல் பேரறி ஞராக, மானுடவியல் விற்பன்னராக, வலம் வந்த ஆகச் சிறந்த மானுடப் போராளியை அமித் ஷா தரம் தாழ்ந்து பேசியது பெரும் பிழையாகும்.
மக்கள் போராட்டம்
அனைத்துத் தரப்பினரும் இத்தகைய இழிவுப் பேச்சிற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தகுதியானவராக இருந்தால், ஒரு மனிதராக இருந்தால் இந்தத் தீச்செயலுக்கு அடுத்த நாடாளுமன்றக்கூட்டத்தில் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு வள்ளுவரே பதில் கண்டுள்ளார்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந் தற்று (குறள் – 208)
பிறருக்குத் தீய செயல்களைச் செய்தவர்களைக் கேடானது விடாமல் தொடரும் என்பது, ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் தொடர்ந்து வந்து அவனது கால்களின் அடியிலேயே தங்கியிருத்தலை போன்ற தாகும். (நாவலர் உரை)
அமித் ஷாவுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்களே இதற்குத் தக்க சான்றாகும்.