தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சாரம்- உணர்வுகள் என எதையும் பாஜக அரசு மதிப்பதில்லை என மக்களவை உறுப்பினர் கனிமொழி கடுமையாக சாடியுள்ளார்.
பொங்கல் விழாவை குறிவைத்து சி.ஏ. (CA) தேர்வுகள் நடத்த இருந்ததை எதிர்த்தால், அது மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
மேலும், தமிழர் விரோத செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.