அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக கூறி மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் அடித்து நொறுக் கினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டினர். முன்னதாக, அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என அமித் ஷா கூறியது சர்ச்சையானது. ஆனால், அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாக கூறி பாஜகவினர் போராட்டம் செய்து வருகின்றனர்.