திருவனந்தபுரம், டிச.18 சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரி மலைக்கு செல்வார்கள். இதற்காக தேவசம் போர்டு தரப்பில் பல் வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (17.12.2024) சபரிமலை அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் கீழே விழுந்தார். உடனடியாக மீட்ட சக பக்தர்கள் அவரை சன்னிதானத் தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி அளித்தனர். காவலர்கள் நடத்திய விசாரணையில் கீழே விழுந்த நபர் கர்நாடக மாநிலம் கனகபுராவைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. கீழே விழுந்த குமாருக்கு கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.