‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் செல்வப்பெருந்தகை வலைப்பதிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.17- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை.

குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (16.12.2024) தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

“ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் ஆளும் பா.ஜ.க. அரசு இன்று (17.12.2024) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பா.ஜ.க.வின் இது போன்ற மக்கள் விரோத அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நிச்சயம் முறியடிப்பார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *