தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் செயலாளராக இருந்தவரும், அதன் பிறகு தலைமை செயலாளராக விளங்கியவரும், ஆளுநரின் ஆலோசகராகப் பணியாற்றியவரும், ஓய்வுக்குப்பின் மிசோராம் மாநில ஆளுநராக இருந்தவரும், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தவரும், தந்தை பெரியாரிடத்தில் பெரும் மதிப்பும், அன்பும் செலுத்தியவருமான ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (14.12.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கழகத் தலைவரைக் கண்டதும் பத்மநாபன் அவர்கள் ஆரத் தழுவினார். தமிழ்நாட்டின் ஒப்பற்ற அறிஞர் வீரமணிக்கு நிகர் வீரமணிதான் என்று மிகுந்த நெகிழ்ச்சியோடு கழகத் தலைவரின் முதுகில் அன்போடு தட்டி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சிறிது நேரம் உரையாடி விடை பெற்றார் கழகத் தலைவர். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி. பூங்குன்றனும் சென்றிருந்தார்.