திராவிடர் கழக மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சூரனூர் காலம் சென்ற சின்னையனின் மகனும், த.அம்பேத்கரின் தந்தையுமான சி.தங்கராசு 7.12.2024 அன்று இரவு 7.45 மணியளவில் இயற்கை எய்தினார், அவர்களுக்கு 8.12.2024 காலை 10 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன், மாவட்ட விவசாய செயலாளர் க. வீரையன், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, ஒன்றிய துணை தலைவர், கு.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோ.கண்ணதாசன், ஒன்றிய துணை செயலாளர் ஜெ.கனகராஜ், சூரனூர் கு.மணிவண்ணன், கு.மனோகரன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். மற்றும் ஏராளமான கிராம மக்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.ராமச்சந்திரன் மறைவு:
கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை புதுச்சேரி மாநில மேனாள் முதலமைச்சர் டி.ராமச்சந்திரன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் வீரவணக்கம் செலுத்தி மலர் மாலை வைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது.