சென்னை, டிச.9- விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கூட் டணியில் உள்ள திமுகவை நேரடியாக விமரிசித்து பேசியிருந்தார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத் தியிருந்தது. இந்நிலையில், ஆதவ் அா்ஜூனாவின் அண்மைக் கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பதாக கட்சியின் முன்னணி நிா்வாகிகள் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன் கூறி யிருந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.