காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள், அதிலிருந்து விடுபட மாநில அரசால் ஊட்டச் சத்து உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இந்த மாதம் முதல் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.