பொங்கல் சிறப்புத் தொகுப்போடு சேர்த்து மக்களுக்கு ரூ.1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு சேர்த்து ரூ.1000 அளிக்கப்பட்டால், ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்ந்து குடும்பத்திற்கு ரூ.2000 கிடைக்கும்.