ஹிந்தி தெரிந்தால் தான் டில்லியில் பிழைக்க முடியும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து வியப்பளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகவும், திறமைக்கு மொழி எப்போதும் தடையாக இருந்தது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் மொழியின் முக்கியத்துவத்தை பேசும் வெங்கையா நாயுடுவிடம் இருந்து இக்கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.