கோயபல்சின் வாரிசுகள்

2 Min Read

பதவி, அதிகாரம் வேண்டுமென்றால் பொய் சொல்ல வேண்டும். மக்களைப் பிரிக்க வேண்டுமென்றால் பொய் சொல்ல வேண்டும்.
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியைக் கற்க தடை” என்கிறார். இவர் படித்த திருச்சி சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, 1951ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அந்த ஆண்டே ஹிந்திப் பிரிவும் இருந்தது என்று கூறுகின்றனர். இதோ அதன் இணைய தளத்தில் உள்ள விபரம்:

சுயவிவரம்

இந்தியா என்பது பல்வேறு மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் விருந்து. உலகின் எந்தவொரு இனம், மதம் மற்றும் பிராந்தியத்தின் உறுப்பினர்களின் அன்றாட வாழ்வில் மொழி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் உணர்வுகள், ஆசைகள் மற்றும் கேள்விகளை நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு வெளிப்படுத்த மொழி உதவுகிறது.

ஹிந்தி சமஸ்கிருதத்திற்கு நேரடியான பரிணாமத்தை கொண்டுள்ளது. உலகில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி யாகும். தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட ஹிந்தி, இந்திய ஒன்றிய அரசின் அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாகும், மேலும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட நமது நாட்டின் இணைப்பு மொழியாக சிறந்த பங்கை ஆற்றி வருகிறது. பகுதி I ஹிந்தி இளங்கலை அளவில் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் மொழியைக் கற்க ஊக்கு விக்கப்படுகிறார்கள். பாடத் திட்டமானது மொழித் திறன், இலக்கியப் பாராட்டு மற்றும் மொழியின் தொடர்பு அம்சங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. புதுடில்லி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும் பல்வேறு புத்தகங்கள் மற்றும் இதழ்கள் மாணவர்களின் அறிவை வளப்படுத்துகின்றன.

இலக்குகள்

தேசிய மொழியை வளர்க்கவும், மக்களை ஒருங்கிணைக்கவும்
மாணவர்கள் மொழியை எளிதாகக் கையாள்வது
மொழி கற்றல் மூலம் மதிப்புகளை வளர்க்க வேண்டும்

குறிக்கோள்கள்

மாணவர்களின் தொடர்புத் திறன்களை வளர்த்துக் கொள்ள, பேசும் ஹிந்தியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல். மொழியின் செயல்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல். காவிய இலக்கியங்களிலிருந்து தார்மீக மற்றும் மதிப்பு அடிப்படையிலான கதைகளை அறிமுகப்படுத்துதல் என்று அதன் இணைய தளத்தில் உள்ளது இன்றும் உள்ளது.

இதுமட்டுமல்ல திருச்சியில் ஹிந்தியை கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள்: செயின்ட் ஜோசப் கல்லூரி – ஜமால் முகமது கல்லூரியில் ஹிந்தி துறை 1951ஆம் ஆண்டே நிறுவப்பட்டது.

‘நேசனல் காலேஜ் – ஹிந்தி துறை 1942 இல் நிறுவப்பட்டது. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 1988 முதல் ஹிந்தி உள்ளது.
அப்படி இருக்க நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்திலேயே மனமறிந்து உண்மைக்கு மாறான தகவலைக் கூறுகிறார் என்றால், இதை என்னவென்று சொல்வது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *