மகாராட்டிராவில் 23.11.2024 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. அன்று மாலையே முழு பலம் பெற்றது பாஜக கூட்டணி.
ஆனால் முதலமைச்சர் தேர்வில் சிக்கல் துவங்கியது. ஆக்ஸிடெண்டல் முதலமைச்சரான ஏக் நாத் ஷிண்டே ” நான்தான் முதலமைச்சர் ” என்று தொடர்ந்து அடம்பிடித்தார். டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். திடீரென நான் முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கினால் எனது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள் என்று கூறி நான் அடுத்த சில ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருக்கிறேன்” என்று கெஞ்சிப்பார்த்தார். ஆனால், டில்லியோ சிபிஅய், ஈடி போன்ற காய்களை அவரது கண் முன்னே உருட்டி பயமுறுத்தியது.
“6 மாதங்களுக்கு மட்டும் முதலமைச்சராக இருக்கிறேன்..” என்றார். முடியாது என்றது டில்லி. திடீரென சொந்த ஊருக்குச் சென்று அலைபேசியை அணைத்து வைத்துப் பார்த்தார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கே சென்று மிரட்டினார். பணிந்தார். அடுத்து நிதிஷ் குமாரின் நம்பர்தான் என்று சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு பீகார் தேர்தல் முடிவுகள் விடை கூறலாம்.