செவ்வாய்க் கோள் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அதுவே இன்னும் முழுதாக ஆராயப்படவில்லை. இக் கோளை இரண்டு நிலவுகள் சுற்றி வருகின்றன. இந்த நிலவுகள் விண் கற்களாக இருந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் நிலவு களாக மாறியதாகக் கருதப்படுகிறது.
‘போபோஸ்’ என்ற நிலவு கொஞ் சம் கொஞ்சமாக செவ்வாயை நோக்கிச் செல்கிறது; ‘டெய்மோஸ்’ என்ற நிலவு, செவ்வாயை விட்டு விலகிச் சென்றுகொண்டே உள் ளது. இவற்றைப் பற்றி மனிதகுலம் இதுவரை பெரிதாக எதையும் அறிந்துகொண்டதில்லை.
அந்தக் குறையைத் தீர்ப்பதற் காக ஜப்பான், மார்ஷியன் மூன்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் என்ற செயற் கைக் கோளைச் செவ்வாயின் நிலவான ‘போபோஸு’க்கு அனுப்ப உள்ளது. செயற்கைக்கோள் அங்கு சென்று குழித் தோண்டி, சோதனைக் காக ‘போபோஸின்’ மண்ணை எடுத்துக்கொண்டு பூமிக்கு வர உள்ளது.
விண்கலம் செலுத்தப்பட்டு ஓராண்டிற்குள் செவ்வாயின் நிலவை அடையும் என்றும், 2029 ஆம் ஆண்டிற்குள் நமது ஆய்வு களுக்குத் தேவையான அளவு மண்ணை எடுத்துக்கொண்டு பூமிக் குத் திரும்பும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.