கரோனாவுக்கும் பூஞ்சைக்கும் என்ன சம்பந்தம்?

1 Min Read

உலக அளவில் கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ் வேறு விதமான பாதிப்புகள் காணப் பட்டன. சிலருக்கு மிதமான காய்ச் சல் இருந்தது, சிலருக்கு மிகக் கடு மையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதற்கான காரணிகள் என்னவென்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.

சில ஆய்வுகள் ரத்தத்தின் வகைகளைப் பொறுத்து பாதிப்புகள் மாறுவதாகத் தெரிவித்தன. சில ஆய்வுகளில் குடலில் வாழும் பாக் டீரியாவின் தன்மையைப் பொறுத்து பாதிப்புகள் மாறுபட்டன என்று தெரிவித்தன. ஆனால், முதன் முறையாக குடலில் வாழும் பூஞ்சை களுக்கும் கரோனா பாதிப்புகளுக்கு மான தொடர்பு நியூயார்க்கில் உள்ள கர்னல் மருத்துவ பல்கலைக் கழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் கடுமை யாக பாதிக்கப்பட்டிருந்த 66 பேர், மிதமாக பாதிக்கப்பட்ட 25 பேர், தொற்று ஏற்படாத, ஆரோக்கிய மான 36 பேர் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. பாதிப்பு அதிகமாக இருந்தவர்களின் உடலில் ‘கேண்டிடா அல்பிகன்ஸ்’ என்ற ஒரு வகை பூஞ்சை அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பூஞ்சைக்கும் கரோனா தொற்றின் தீவிரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக எலிகள் மீது விஞ்ஞானி கள் சோதனை செய்து பார்த்தார்கள்.

குடலில் அதிகமான ‘கேண்டிடா’ பூஞ்சை உடைய எலிகளுக்குக் கரோனா தொற்று தீவிரமாக இருந் தது. மற்ற எலிகளுக்கு லேசாகவே இருந்தது.

இதிலிருந்து நம்முடைய உடலைத் தாக்கும் நோய்களின் தீவிரத்திற்கும், குடலில் உள்ள பூஞ்சைகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பு ஆதாரப்பூர்வமாக நிரூ பிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *